Categories
கிரிக்கெட் விளையாட்டு

என்.சி.ஏ. தலைவராக பொறுப்பேற்கும் லட்சுமணன் ….! வெளியான தகவல் ….!!!

வி.வி.எஸ்.லட்சுமணன்   என்.சி.ஏ.தலைவராக பொறுப்பேற்குமாறு பிசிசிஐ தலைவர் கங்குலி,  செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ரவி சாஸ்திரியின் பதவி காலம் நடப்பு  உலகக் கோப்பையுடன் முடிவடைய உள்ளது . இதனிடையே இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார் இதற்கு முன்பு இவர் தேசிய கிரிக்கெட் அகடமியில் தலைவர் பதவியில் இருந்துள்ளார். இதனிடையே ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதால்  தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவராக முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணன் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது கடந்த சில வருடங்களாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரோடு. தேசிய கிரிக்கெட் அகாடமி தலைமை நெருக்கமாக செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில் டிராவிட் மற்றும் வி.வி.எஸ். லட்சுமணன் இருவரும் இணைந்தால் இந்திய அணிக்கு நல்ல வீரர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதோடு வலுவான தளம் அமைக்கப்படும். இதனால் தேசிய கிரிக்கெட் அகடமியில் தலைவராக  வி.வி.எஸ்.லட்சுமணனை  பொறுப்பேற்குமாறு பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் இவர் விரைவில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு காணப்படுகிறது .இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வி.வி.எஸ். லட்சுமணன்-  ராகுல் டிராவிட் ஜோடி பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |