Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும்…. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை….!!!!

அண்மையில் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. பெட்ரோல் 5 ரூபாயும், டீசல் 10 ரூபாயும், குறைக்கப்பட்டது. அதேபோன்று பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டது. முன்னதாக, தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்தபின்னர், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் மட்டுமே திமுக அரசு குறைத்தது.

எனவே தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார். இதுபற்றி அவர் ட்விட்டர் பக்கத்தில் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் 5 ரூபாய் குறைக்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் மட்டுமே குறைத்தது டீசல் மீதான வரியை குறைக்கவில்லை. மற்ற மாநிலங்களை விட அதிக பட்சமாக தமிழகத்தில் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Categories

Tech |