Categories
மாநில செய்திகள்

BREAKING: சென்னையில் ரயில்கள் ரத்து இல்லை… தாமதம் மட்டுமே…!!!

கனமழை காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், சென்னையில் இருந்து புறப்படும் எந்த ஒரு தொலைதூர ரயிலும் ரத்து செய்யப்படவில்லை என்றும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மாலை புறப்படும் சில ரயில்கள் மட்டுமே தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, சென்ன- மங்களூரு விரைவு ரயில் இன்று 04:20-க்கு பதில் இரவு 7.30 மணிக்கு புறப்படும். இணை ரயில் தாமதத்தால் சென்னை ஜெய்ப்பூர் விரைவு ரயில் மாலை 5.40 மணிக்கு பதில் 8.30 மணிக்கு புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Categories

Tech |