Categories
உலக செய்திகள்

‘2G விதிகள் அமல்ப்படுத்தப்படும்’…. மருத்துவர்கள் கோரிக்கை…. ஜெர்மனி அரசின் நடவடிக்கை….!!

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கென 2G விதிமுறைகளை அமல்ப்படுத்தபப்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு என்று தேசியக் கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும் என ஜெர்மன் அரசுக்கு கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. மேலும் பல முன்னணி அரசியல் தலைவர்கள் மற்றும் மருத்துவர்கள் 2G விதிமுறைகளை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர். இதனால் கடந்த சனிக்கிழமை என்று பத்திரிகையாளர்களிடம் ஜெர்மன் மருத்துவ சங்கத்தின் தலைவரான கிளாஸ் ரெய்ன்ஹார்ட் கூறியதில் ” தொற்று நோய்களின் சங்கிலியை முறியடிக்க எங்களுக்கு தற்பொழுது தெளிவான விதிகள் தேவைப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

சான்றாக உணவகங்கள், திரையரங்கங்கள்,  நிகழ்ச்சிகள் போன்ற இடங்களுக்கு கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள், தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் மட்டும் தான் அனுமதிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். மேலும் SPDயின் சுகாதார நிபுணரான Karl Lauterbach கூறியதில் “தடுப்பூசி செலுத்திய மற்றும் நோய் தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்களை மட்டுமே அனுமதிக்கும் 2G விதிமுறைகளை மளிகை, மருந்தகம் போன்ற அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் அமல்ப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக ஜெர்மனியின் அண்டை நாடான ஆஸ்திரியாவில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நாடு தழுவிய 2G விதியானது அமல்படுத்தப்பட்டது.

Science, Politics, and Pandemic: Dr. Karl Lauterbach, Germany's Leading  Health Policy Expert, on Why There Has Never Been a More Crucial Time for  Scientists to be Engaged in Politics | by Voices

அதிலும் அங்குள்ள மதுக்கடைகள், அழகு நிலையங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் அனுமதிக்கப்படக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஜெர்மனியில் Saxony பகுதியில் நாளை முதல் 2ஜி விதிகள் அமல்படுத்தப்படுகிறது. அங்கு கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள், தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே உணவகங்கள், கிளப்புகள்,  ஓய்வு விடுதி மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில் அனுமதிக்கப்படுவர். இதனால் விளையாட்டு மைதானங்கள் பாதிக்கப்படும். இருப்பினும் சில்லறை வர்த்தகங்கள் மற்றும் சேவைகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Medical President: Health threats from climate change “no longer a distant  threat” – Pledge Times

இதற்கிடையில் ஜெர்மன் மருத்துவ சங்கத்தின் தலைவரான Klaus Reinhardt மற்றும் அரசியல்வாதிகள், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு மட்டுமே பொது முடக்கத்தை கொண்டு வர வேண்டும் என்பதை அரசு கருத்தில் கொள்வது குறிப்பிடத்தக்கது என்று கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து பவேரிய தலைவரான Markus Soder கூறியதில் ” அலுவலகங்கள் மற்றும் பணியிடங்களில் 3G விதிமுறைகளை கொண்டு வர வேண்டும். குறிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொண்டீர்களா  பரிசோதனை செய்தீர்களா என்று ஊழியர்களிடம் கேட்க உயரதிகாரிகளுக்கு உரிமை வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |