தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக சென்னையில் நேற்று இரவு முதலே இடைவிடாமல் மழை பெய்து வருவதால் சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சென்னை பேசின் பாலத்தில் அதிக அளவு தண்ணீர் தேங்கி உள்ளதால் சென்ட்ரலுக்கு வரும் அனைத்து ரயில்களும் பெரம்பூர், திருவள்ளூர் ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன. விரைவு ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக தண்ணீர் தேங்கி உள்ளதால் சென்னையில் 6 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டு உள்ளது. அதன்படி ஈவிஆர் சாலை கங்கு ரெட்டி சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை ஆகியவை மூடப்பட்டுள்ளது.மேலும் வில்லிவாக்கம் சுரங்கப்பாதையில் இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்ல போக்குவரத்து காவல்துறை தடை விதித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.