Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கணவருடன் அடிக்கடி ஏற்பட்ட தகராறு…. பெண்ணின் விபரீத முடிவு…. ஈரோட்டில் சோகம்….!!

குடும்ப தகராறு காரணமாக பெண்  தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள குறிச்சி மாணிக்கம்பாளையம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு செல்லக்கிளி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு கிஷ்னேஸ்வரன் என்ற 2 1/2 வயது ஆண் குழந்தை இருக்கின்றது. இதில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. கடந்த 2-ஆம் தேதி மீண்டும் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் கணவரை பயமுறுத்தும் நோக்கில் ஸ்டவ் அடுப்பில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து செல்லக்கிளி தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் செல்லக்கிளி உடல் முழுவதிலும் தீ பரவியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆறுமுகம் போர்வையை எடுத்து செல்லக்கிளியின் மீது பற்றிய தீயை அணைக்க முயற்சி செய்தார். அப்போது ஆறுமுகமும் மீதும் தீக்காயம் ஏற்பட்டு படுகாயமடைந்தார். இதனையடுத்து கணவன்-மனைவி இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

அதன்பின் அவர்கள் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனைதொடர்ந்து செல்லக்கிளி மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செல்லக்கிளி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆறுமுகத்துக்கும், செல்லக்கிளிக்கும் திருமணம் முடிந்து 4 வருடங்களே ஆவதால் கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவியும் விசாரணை மேற்கொள்ள இருக்கின்றார்.

Categories

Tech |