Categories
உலக செய்திகள்

“என்னது?”.. ஒரு பழம் 20 லட்சமா..? ஜப்பான் மக்களிடையே அதிகரிக்கும் டிமாண்ட்..!!

ஜப்பான் நாட்டில் 20 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு பழத்திற்கு அதிக டிமாண்ட் இருக்கிறது.

ஜப்பானில் விளையும் யுபாரி மெலன் என்ற பழத்திற்கு மக்களிடையே அதிக டிமாண்ட் இருக்கிறது. தற்போது 20 லட்சமாக இருக்கும் இதன் விலை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது ஜப்பான் நாட்டில் மட்டும் தான் விளைவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

எனினும் அந்நாட்டிலேயே, கடைகள், சந்தைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் இந்த பழம் கிடைப்பது அரிதாகத் தான் உள்ளது. இதன் விலை 20 லட்சம் என்பதால் சாதாரணமான மக்கள் ஒரு சிறிய துண்டை கூட வாங்குவதில்லை. சமீபத்தில் இந்த பழம் தொடர்பில் வெளியான அறிக்கைகளின் படி அதிக விலை என்பதால் பணக்கார மக்கள், அந்தஸ்து மிக்கவர்கள் தான் இந்த பழத்தை வாங்கி சாப்பிட முடிகிறது.

மேலும், இப்பழம் குறைவான அளவில் தான் விற்கப்படுகிறது. இதனால், உணவகங்களில் கூட இந்த பழம் கிடைப்பதில்லை. இது இவ்வளவு அதிக விலையாக இருந்தாலும் ஜப்பான் நாட்டு மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிகமான விலை இருந்தாலும், இப்பழத்தை சாப்பிட்டு விட வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள்.

ஜப்பான் நாட்டில் இருக்கும் யுபாரி என்ற இடத்தில் இந்த பழம் விளைவிக்கப்படுகிறது. விலை அதிகமாக இருக்கும் இப்பழம் அதிகமாக விளைவிக்கப்படுவதில்லை. கிரீன்ஹவுஸ் முறையில் தான் விளைவிக்கப்படுகிறது.

Categories

Tech |