லாரியில் பதுங்கி கிடந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் வனப்பகுதியில் பத்திரமாக கொண்டு சேர்த்தனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆய்க்குடியிலிருந்து லாரி ஒன்று நெல் விதைகளை ஏற்றிக்கொண்டு நெல்லை நோக்கி சென்றுள்ளது. அந்த லாரி சுரண்டை பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் இருக்கைக்கு முன்புறம் உள்ள கண்ணாடியின் அருகில் கட்டுவிரியன் வகையை சேர்ந்த பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது.
இதனை கண்ட ஓட்டுனர் அதிர்ச்சியடைந்து உடனடியாக லாரியை விட்டு கீழே இறங்கியுள்ளார். அதன்பின் சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியில் பதுங்கிக் கிடந்த கட்டுவிரியன் வகையைச் சேர்ந்த பாம்பை பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.