தகராறில் ஓய்வு பெற்ற மருதாளுனரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த பேருந்து நடத்துனரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் சாலபாளையம் கிராமத்தில் கருப்பன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். ஓய்வுபெற்ற மருந்தாளுனரான இவர் தனது வீட்டிற்கு புதிய தளம் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளார். இதற்காக தனது வீட்டிற்கு அருகே உள்ள பொது குழாயிலிருந்து கருப்பன் தண்ணீர் எடுத்துள்ளார். இதனால் இவருக்கும், இவரது பக்கத்து வீட்டுக்காரர் சுப்பிரமணி என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆத்திரமடைந்த சுப்ரமணி அருகே இருந்த இரும்பு கம்பியை எடுத்து கருப்பனை தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த கருப்பன் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் கருப்பனை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து நாமக்கல் காவல்துறையினர் சுப்பிரமணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். எனவே காவல்துறையினர் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பேருந்து நடத்துனரான சுப்பிரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.