தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் தமிழகம் புதுச்சேரியில் நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக நாளை மற்றும் நாளை மறுதினம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நாளை முதல் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் ஒத்தி வைக்கப்பட உள்ளதாகவும், மழையின் தன்மை குறித்து பள்ளி திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.