Categories
மாநில செய்திகள்

பாதிப்புகளை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்…. தமிழக அரசு உத்தரவு ….!!!!

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் ஸ்டாலின் அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் வடகிழக்கு பருவமழையை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. நிவாரண பணிகளை தமிழக அரசும் மாநகராட்சியும் முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையில் மழை பாதிப்பை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் மண்டலத்திற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரிகள் என 15பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மண்டலம்1: கமல் கிஷோர்
மண்டலம்2: கணேசன்
மண்டலம்3: சந்தீப் நந்தூரி
மண்டலம்4: டி.ஜி. வினய்
மண்டலம்5: மகேஸ்வரி ரவிகுமார்
மண்டலம்6: பிரதீப் குமார்
மண்டலம்7: சுரேஷ்குமார்
மண்டலம்8: பழனிசாமி
மண்டலம்9: ராஜாமணி
மண்டலம்10: எம்.விஜயலட்சுமி
மண்டலம்11: சங்கர்லால் குமாவத்
மண்டலம்12: எல்.நிர்மல்ராஜ்
மண்டலம்13:மலர்விழி
மண்டலம்14: சிவஞானம்
மண்டலம்15: வீரராகவ ராவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |