தமிழகத்தில் முன்பதிவு இல்லாத ரயில்களில் பயணம் செய்ய மொபைல் டிக்கெட் வசதியை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. முன்பதிவு இல்லாத ரயில்களில் பயணம் செய்ய டிக்கெட் வாங்குவதற்கு கூட்டம் அலைமோதுகிறது. அதனால் பயணம் செய்வோர் பாதிக்கப்படுகின்றனர்.இந்நிலையில் முன்பதிவு இல்லாத ரயில்களில் பயணம் செய்ய மொபைல் டிக்கெட் வசதியை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி ரயில் நிலையத்திலோ வேறு எந்த பகுதியிலும் இருந்து கொண்டே டிக்கெட்டுகளை பெற முடியும்.ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளுக்கு ஊழியர்கள் நேரடியாகச் சென்று கையடக்க சிறிய கருவி மூலம் டிக்கெட்டுகளை பயணிகளுக்கு வழங்குவார்கள். ரயில் நிலையம் இல்லாத வேறு எந்த பகுதியிலும் இந்த கருவி மூலம் பயணிகள் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். பயணிகளின் வசதிக்காக இந்த புதிய வசதியை தெற்கு ரயில்வே கொண்டு வந்துள்ளது.