ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மர்ம முறையில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் மாரிமுத்து அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் அவருடைய மனைவி மாரிமுத்துவிடம் கோபித்துக் கொண்டு தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மாரிமுத்து மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கடையநல்லூர் காவல் துறையினர் மாரிமுத்துவின் உடலை உடனடியாக மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.