டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவானந்தம் நகரில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. கடந்த நவம்பர் 5 – ஆம் தேதியன்று இரவு வழக்கம் போல் விற்பனையை முடித்துவிட்டு ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இதனை அடுத்து மறுநாள் காலையில் ஊழியர்கள் கடையை திறக்க முயன்றபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதன் பிறகு ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 41000 ரூபாய் பணம், 7 மது பாட்டில்கள், ஒரு யு.பி.எஸ். கருவி காணாமல் போனது தெரியவந்துள்ளது. இது குறித்து ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.