Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமான செயல்…‌‌. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விருதுநகர் ரோட்டில் இருக்கும் தங்கும் விடுதியின் பின்புற பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு முதியவர் நின்று கொண்டிருந்தார். இதனை அடுத்து அந்த முதியவரை அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

அதன் பிறகு அந்த முதியோர் பராசக்தி நகரில் வசிக்கும் வேல்சாமி என்பது தெரியவந்துள்ளது. அவர் சட்ட விரோதமாக வெளி மாநில லாட்டரி என்று சில எண்களை எழுதி கொடுத்து பொதுமக்களிடம் பணம் வசூலித்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து வேல்சாமியிடம் இருந்து 24,990 ரூபாய் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வேல்சாமியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |