Categories
உலக செய்திகள்

“சீனாவில் அதிக பனிப்பொழிவு!”.. 10 டிகிரி செல்ஸியஸாக குறைந்த தட்பவெட்ப நிலை..!!

சீனாவில் பனி பொழிவு ஏற்பட்டதால் 10டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக தட்பவெப்ப அளவு குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இரண்டு நாட்களாக தொடர்ந்து பனிப்பொழிவு பெய்து வருகிறது. இதனால் சில பகுதிகளில் 10 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக தட்பவெப்பநிலை குறைந்திருக்கிறது. Yanqing மற்றும் Changqing போன்ற இரண்டு மாவட்டங்களில் 10 லிருந்து 30 சென்டிமீட்டர் அளவு பனிப் பொழிவு ஏற்பட்டிருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.

மேலும் சாலைகளில் அதிகமாக பனி படர்ந்திருப்பதால் அவற்றை அகற்றக்கூடிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கான்சு என்ற மாகாணத்தில் பனிப்பொழிவு அதிகமாக ஏற்பட்டு குளிர் காற்று வீசுகிறது. இதனால் Lanzhou என்ற நகரத்தில் -10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |