Categories
அரசியல் சற்றுமுன்

JUST IN: மக்களை காப்பாற்றுங்கள்…. சசிகலா வேண்டுகோள்…!!!

சென்னையில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. குறுகிய நேரத்தில் அதிக மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வீடுகளிலும் வெள்ளம் புகுந்துள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மழை வெள்ளம் தேங்கியுள்ள இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் பேசிய அவர், தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றுள்ள மக்கள் சென்னை திரும்புவதை ஒன்றிரண்டு நாட்கள் தள்ளிப்போட கேட்டுக்கொள்வதாக வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், மழைக்காலங்களில் பொதுவாக பயணங்கள் தவிருங்கள் என்று சொல்லலாமே தவிர வெளியில் சென்றவர்கள் சென்னைக்கு திரும்பி வர வேண்டாம் என்று ஆட்சியாளர்கள்  சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. சென்னை வாழ் மக்கள் வெள்ள பாதிப்பிலிருந்து இந்த அரசாங்கம் தங்களை எப்படியும் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். அவர்கள் கைவிட்டு விடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |