Categories
தேனி மாவட்ட செய்திகள்

தந்தை இறந்ததால் சோகம்… மகனின் விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

தந்தை இறந்த சோகத்தில் மகனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள தென்கரை பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேனி அரசுத்து மருத்துவமனையில் உள்ள ஆய்வக மையத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு சீனிவாசனின் தந்தை உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதனால் சீனிவாசன் மனமுடைந்து யாருடனும் பேசாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த சீனிவாசன் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தென்கரை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் சீனிவாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |