டி20 உலக கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 189 ரன்கள் குவித்துள்ளது .
டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் பாபர் அசாம் – முகமது ரிஸ்வான் ஜோடி களமிறங்கினர் .இதில் முகமது ரிஸ்வான் 15 ரன்னில் வெளியேற அடுத்து வந்த பகர் ஸமான் 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.இதன்பிறகு களமிறங்கிய முகமது ஹபீஸ், பாபர் அசாமுடன் ஜோடி சேர்ந்தார் .
இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர் .இதில் முகமது ஹபீஸ் 31 ரன்னில் ஆட்டமிழக்க , பாபர் அசாம் அரைசதம் கடந்து அசத்தினார் .இதன்பிறகு களமிறங்கிய சோயிப் மாலிக் அதிரடியாக விளையாடினார் .இறுதியாக பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்துள்ளது.இதில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 66ரன்னும், சோயிப் மாலிக் 54ரன்னும் எடுத்தனர்.இதைதொடர்ந்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி விளையாடி வருகிறது .