Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

breaking: அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் சில தினங்களாகவே நல்ல மழை பெய்து வருகின்றது. குறிப்பாக சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பெய்த மழையின் காரணமாக மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது. மேலும் அணைகளும் நிரம்பி உள்ளதால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் முதல்வர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

இந்த நிலையில் சென்னையில் அரசு அலுவலர்களுக்கு நாளை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அத்தியாவசிய சேவை வழங்கும் துறைகள் தவிர்த்து அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .ஆவின், பொது போக்குவரத்து, மின்சாரம் உள்ளாட்சித் துறை அலுவலகங்கள் வழக்கம்போல செயல்படும். மழை நிவாரணங்களை கருத்தில் கொண்டு தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |