தமிழகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இதனால் தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு அநேக இடங்களில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதலே நல்ல மழை பெய்ததால் சாலையின் இருபுறங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. சென்னையில் உள்ள பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் பெய்து வரும் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதி பொதுமக்கள் மருத்துவ உதவிக்கு 24 மணிநேரமும் தொடர்பு கொள்ள உதவி எண்களை சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அதன்படி 044-29510400, 044-29510500, 944340496, 8754448477ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் தீபாவளிக்கு சொந்த ஊரை சேர்ந்தவர்கள் சென்னை திரும்ப தேவையான பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.