Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS நியூசிலாந்து தொடர் : இந்திய அணியில் இளம் வீரர்கள் சேர்ப்பு ….! வெளியான தகவல் ….!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இளம் வீரர்களான  வெங்கடேஷ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தேர்வு செய்யப்பட இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது .

டி20 உலக கோப்பை தொடருக்குப் பிறகு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது .இத்தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது .இந்நிலையில் இந்திய அணியில் சீனியர் வீரர்களான விராட் கோலி ரோகித் சர்மா ஆகியோருக்கு இத்தொடரில்  இருந்துஓய்வு அளிக்கப்பட இருப்பதாக தெரிகிறது .ஆனால் இதுகுறித்து ரோஹித் சர்மாவிடம் தேர்வுக் குழுவினர் ஆலோசனை நடத்திய பிறகுதான் முடிவெடுக்கப்படும் .ஒருவேளை ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிக்கு ஓய்வு எடுக்கிறேன் டி20 போட்டிக்கு தலைமை ஏற்கிறேன் என  கூறினால் ரோகித்திடம் கேப்டன் பதவி தரப்படும்.

இதனிடையே நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியில் இளம் வீரர்கள்  ருதுராஜ் கெய்க்வாட் வெங்கடேஷ் அய்யர், ஆவேஷ் கான், சேத்தன் சக்காரியாஆகியோரை தேர்வு செய்யப்படுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது .அதோடு டி20 உலக கோப்பை தொடரில் விளையாடிய பல வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன இப்போட்டி முடிந்தபிறகு  இந்திய அணி தேர்வாளர்கள் கூட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணி தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

Categories

Tech |