தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக சென்னை நகரமே தத்தளித்து வருகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழகத்தின் சில பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் குறித்து தமிழக முதல்வரிடம் பேசி தெரிந்து கொண்டேன். மேலும் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு அளிப்பதாக உறுதி அளித்துள்ளேன். அனைவரின் நலனுக்காகவும் , பாதுகாப்பிற்காகவும் பிரார்த்தனை செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.