Categories
மாநில செய்திகள்

BREAKING: 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுமுறை…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கனமழை காரணமாக இன்று மற்றும் நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மேலும் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெள்ள நீர் தேங்கியுள்ளதால் அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை அறிவித்துள்ளார்.

தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை,நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், தஞ்சை,திருவண்ணாமலை மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப் போவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |