Categories
மாநில செய்திகள்

ALERT: 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களாக கன மழை விடாமல் பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது . அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,திருப்பத்தூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்த்து வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி,புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |