உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் மதுரையில் நடைபெற்று வருகின்றது.
உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கக்கூடிய நிலையில் மாநில உள்ளாட்சி தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றது . இதில் மதுரை மாவட்ட ஆட்சியர், திண்டுக்கல் , தேனி , விருதுநகர் ஆகிய நான்கு மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இதில் உள்ளாட்சித் தேர்தலில் நடைபெறக் கூடிய மாநகராட்சி , நகராட்சி , பேரூராட்சி , ஊராட்சியை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் வருவாய் துறை அதிகாரிகள் , காவல்துறை அதிகாரிகள் பலரும் பங்கேற்றுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலையடுத்து எந்த அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கின்றது என்றும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக சட்டமன்ற , நாடாளுமன்ற தேர்தலில் போலில்லாமல் லட்சக்கணக்கான இடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியிட கூடிய நிலையில் அதனை எவ்வாறு சமாளிப்பது , தேர்தல் நடத்துவதற்கு கிராமப்புறங்களின் அடிப்படை வசதிகள் எந்த அளவுக்கு இருக்கிறது அங்கு பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எந்தளவுக்கு பாதுகாப்பான முறையில் இருக்கும், எவ்வித குளறுபடியும் இல்லாத அளவிற்கு சிறந்த முறையில் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து விதமான ஆலோசனைகளும் இந்த கூட்டதில் ஆலோசிக்கப்படுகின்றது.