தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முதல் இடை விடாது கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இதனிடையே தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு திரும்பிய அனைவரும் சென்னையை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் நேரம் நீட்டிக்க படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 11 மணிவரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.