‘சந்திரமுகி’ படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான படம் ”சந்திரமுகி”. பி. வாசு இயக்கிய இந்த படத்தில் நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, பிரபு மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்ததன் மூலமாக ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில், இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதலில் இந்த படத்தில் கதாநாயகி கதாபாத்திரத்திற்கு தேர்வானது மலையாள நடிகை நவ்யா நாயர் என கூறப்படுகிறது. மேலும், சில காரணங்களால் இவர் இந்த படத்தில் நடிக்காமல் போனதால், நயன்தாரா இந்த படத்தில் நடிப்பதற்கு தேர்வானதாக தகவல் வெளியாகியுள்ளது.