Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உறங்கி கொண்டிருந்த தம்பதியினர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டில் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற முகமூடி கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொட்டகாஜனூர் தோட்டத்துசாலை பகுதியில் சண்முகம்-சத்தியா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமாக 10 ஏக்கர் தோட்டம் இருக்கின்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இவர்களுக்கு திருமணம் முடிந்து விட்டது. இதனால் சண்முகமும், சத்தியாவும் தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் வீட்டு கதவை திறந்து வைத்தபடி உள்ளே உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென கத்தியுடன் அவர்களின் வீட்டிற்குள் நுழைந்தனர்.

அந்த மர்ம நபர்களின் சத்தம் கேட்டு சண்முகமும், சத்தியாவும் திடுக்கிட்டு எழுந்தனர். அதன்பின் மர்ம நபர்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கணவன்-மனைவி இருவரும் திருடன் என்று சத்தமிட்டனர். இதன் காரணமாக சண்முகம், சத்தியா இருவரையும் மர்மநபர்கள் கத்தியை காட்டி  மிரட்டல் விடுத்தனர். மேலும் சண்முகமும், சக்தியாவும் சத்தம் போடாமல் இருக்க மர்ம நபர்கள் 2 பேரின் வாயில் துணியை வைத்து அடைத்ததோடு, கைகளை கயிற்றால் கட்டினார்கள். இதனைதொடர்ந்து மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 4 1/2 பவுன் நகையை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

இவ்வாறு கொள்ளையர்கள் சென்ற சுமார் 1/2 மணி நேரத்திற்கு பிறகு கணவன்- மனைவி இருவரும் தாங்களாகவே கட்டுகளை அவிழ்த்துக் கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு தடவியல் நிபுணர்கள் சென்று அங்கு பதிவான கைரேகைகளை சேகரித்தனர். அதுமட்டுமின்றி மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது அது வீட்டிலிருந்து தோட்டம் வரை ஓடி நின்று யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற முகமூடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |