Categories
சென்னை மாநில செய்திகள்

தொடர் கனமழை….. சென்னையில் 12 மின் இணைப்புகள் நிறுத்தம்…. திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முதல் கன மழை விடாமல் பெய்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து நேற்று நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்,மூன்று நாட்களுக்கு சென்னைக்கு யாரும் வரவேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தார்.அதுமட்டுமல்லாமல் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்திட உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் மீண்டும் தொடர் கனமழை பெய்ய தொடங்கியதால் சுமார் 12,000 மின் இணைப்புகள் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் மின்னகம் மையத்தை 9498794897 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |