சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் காவல்துறையினர் சந்தைமேடு,கலைஞர் நகர் போன்ற பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கலைஞர் நகர் பகுதியில் ஒரு வீட்டின் பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அம்பேத் என்பவர் மதுபாட்டில்கள் விற்றது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அம்பேத்தை கைது செய்து அவரிடமிருந்த 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.