Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஏரிய பயண கட்டணம்…. சென்னைவாசிகளுக்கு பெரும் அதிர்ச்சி….!!

சென்னையில் கனமழை காரணமாக பொது போக்குவரத்து பெரிய அளவில் முடங்கியுள்ளது. மேலும் புறநகர் ரயில் சேவையும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. 10% பேருந்துகள் மட்டுமே செயல்படுவதாக தெரிகிறது. வழக்கமாக சென்னை மாநகராட்சி சார்பில் தினந்தோறும் 3,100 பேருந்துகள் செயல்பட்டு வந்தன. ஆனால் இந்த மழை பாதிப்புகளால் 400 பேருந்துகள் மட்டுமே செயல்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கேப் மற்றும் ஆட்டோக்களின் பயணக் கட்டணம் உயர்ந்துள்ளது. மேலும் நீண்ட தூர பயணத்திற்கு வழக்கத்தை விட 200% கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர், ஆவடி, கடற்கரை, திருவெற்றியூர், பெரம்பூர், செல்லும் புறநகர் ரயில்களில் நேரத்தை தெற்கு ரயில்வே மாற்றியுள்ளது. இது பற்றி விவரங்களை பயணிகளுக்கு தெரிவிக்க போதுமான உதவி மையங்கள் இல்லை.

எனவே வழக்கமான நேரத்திற்கு வேலைக்கு செல்வோர் ஆட்டோக்கள் மற்றும் கேப்களை நாட வேண்டியுள்ளது. மேலும் விமானங்கள் வழக்கமான நேர அட்டவணைப்படி இயக்கப்படுகிறது. ஆனால் மழையின் காரணமாக சரியான நேரத்திற்கு நிலையத்திற்கு செல்ல முடியாமல் பலர் விமானங்களை தவற விடுகின்றனர்.

Categories

Tech |