Categories
மாநில செய்திகள்

என்னது இன்னும் 25 நாட்களுக்கா?…. தமிழக மக்களுக்கு அதிர்ச்சி தரும் புதிய தகவல்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் பெய்த கனமழை மற்றும் பெரு வெள்ள பாதிப்புகளை நினைவுபடுத்தும் வகையில் தற்போது மழை பெய்து கொண்டிருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வருகின்ற 11 ஆம் தேதி வரை அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வாளரின் ஆடியோ பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில்,அந்தமான் பகுதியில் உருவாகக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடலோர பகுதிகளில் தொடர் மழையை அளிக்கும். நவம்பர் 8 முதல் 12 ஆம் தேதி வரை அதிக மழை பெய்யும்.அதேசமயம் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 19ஆம் தேதி வரை மழையை கொடுக்கும்.அதன் பிறகு 20 ஆம் தேதியில் வா நிலையில் மாற்றம் ஏற்பட்டு வெளியில் தென்பட தொடங்கும்.

மேலும் 21 ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இல்லை. அதன் பிறகு 25 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வருகின்றவருகின்ற இருபத்தி நான்காம் தேதியிலிருந்து டிசம்பர் 3 ஆம் தேதி வரை தீவிர மழை பெய்யும். டிசம்பர் மாதத்திலும் அதீத கனமழை பெய்யும். இதையடுத்து நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் 25 நாட்களுக்கு நல்ல மழை பெய்யக்கூடும். ஜனவரியிலும் மழை தொடர வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |