தமிழ்நாட்டில் கன மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்ய தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி வரும் கனமழை மற்றும் பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்போது வெள்ள பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்த முகஸ்டாலின் தமிழகத்தில் மாநில பேரிடர் நிதி கொரோனா நிவாரண பணிகளுக்கும் இதுவரை ஏற்பட்டுள்ள பல்வேறு பாதிப்புகளுக்கும் செலவு செய்யப் பட்டுள்ளதால் தேசிய பேரிடர் நிதியில் இருந்து போதுமான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் தமிழகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகளுக்கு தேவையான ஒத்துழைப்பை நல்குவதாகவும் உறுதியளித்தார். மேலும் கன மழையால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் பாதுகாப்புடன் இருக்க பிரார்த்தனை செய்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.