Categories
தேசிய செய்திகள்

திடீரென்று சுட்ட சிஆர்பிஎப் வீரர்…. சக வீரர்கள் 4 பேர் பலி…. சத்திஸ்கரில் அதிர்ச்சி…!!!

சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் சக வீரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவமானது ராய்ப்பூரில் இருந்து 400 கிமீ தொலைவில் இருக்கும் லிங்கம்பள்ளி கிராமத்தில் உள்ள சிஆர்பிஎஃப் 50ஆவது பட்டாலியன் முகாமில் அதிகாலை 3.30 மணியளவில் நடந்ததாக பஸ்தர் ரேஞ்ச் காவல் கண்காணிப்பாளர் சுந்தர்ராஜ் என்பவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த முதற்கட்ட தகவலின்படி, ஒரு சிஆர்பிஎஃப் வீரர் ஏகே-47 துப்பாக்கியால் சக வீரர்களை சுட்டதாக உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த வீரர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. படுகாயமடைந்த வீரர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |