Categories
மாவட்ட செய்திகள்

கோவையில் ரயில்கள் மூலம் போதைப் பொருள் கடத்தலா….?? கண்காணிப்பை தீவிரப்படுத்திய போலீசார்…!!

கோவையில் ரயில்கள் மூலம் போதைப் பொருட்கள் கடத்துவதை தடுக்க ரயில்வே போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து கோயம்புத்தூர் முக்கியமான தொழில் நகரமாக விளங்கி வருகிறது. இங்கு வெளிமாவட்டத்தவர் மற்றும் வெளிமாநிலத்தவர் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். இவர்களின் பிரதான போக்குவரத்தாக ரயில்வே துறை விளங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ரயில்கள் மூலமாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நைஜீரியாவில் இருந்து கோவைக்கு வந்த ஒரு வாலிபரிடம் இருந்து 1.25 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர பல்வேறு மாநிலங்களிலிருந்து கஞ்சா, குட்கா, பான்பராக் போன்ற போதை பொருட்கள் கடத்தப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Categories

Tech |