Categories
சினிமா தமிழ் சினிமா

‘அண்ணாத்த வெற்றி அன்னாந்து பார்க்க வைக்கும்’… இயக்குனர் பேரரசு டுவீட்…!!!

அண்ணாத்த படம் குறித்து இயக்குனர் பேரரசு டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவான அண்ணாத்த படம் தீபாவளியன்று தியேட்டர்களில் ரிலீஸானது. சிவா இயக்கியுள்ள இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் விஜய்யின் திருப்பாச்சி படத்தோடு அண்ணாத்த படத்தை ஒப்பிட்டு விமர்சித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் இந்த படம் குறித்து எதிர்மறை விமர்சனங்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

https://twitter.com/ARASUPERARASU/status/1456944270166818818

இந்நிலையில் இயக்குனர் பேரரசு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘திரைப்படத்தில் நிறைகுறை இருக்கத்தான் செய்யும். அதை தேசத்துரோக ரேஞ்சுக்கு வன்மத்தோடும், வக்கிரத்தோடும், நாகரிகமற்றும் சிலர் விமர்சனம் செய்வது வேதனையாக இருக்கிறது! சில யூட்யூப் சேனல் விமர்சனம் மிகவும் தரம் தாழ்ந்து போய்விட்டது! இருந்தும் அண்ணாத்த வெற்றி அன்னாந்து பார்க்க வைக்கும்’ என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |