இந்தியாவின் எல்லைப்பகுதியைச் சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்து வருகிறது. இதனால் இரண்டு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே எப்போதும் பதட்டமான சூழ்நிலையே நிலவி வருகிறது. கடந்த ஜூன் 15ம் தேதி கூட கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் இந்திய எல்லைப் பகுதியான அருணாசலப்பிரதேசத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகளைச் சீனா கட்டியிருப்பதாக அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
சீன ராணுவம் தொடர்பான ஆண்டு அறிக்கையை அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையான பெண்டகன் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் தான் இந்திய எல்லையில் 2020ம் ஆண்டு சீனா ஒரு கிராமத்தை உருவாக்கி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் இதற்கான செயற்கைக்கோள் படத்தையும் அமெரிக்கப் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது.