தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக ராமேஸ்வரம், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மீனவ கிராமங்களின் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப மாறும் அருகில் உள்ள துறைமுகம் மீன்பிடி இறங்கு தளங்களுக்கு பாதுகாப்பாக செல்லுமாறும் மீன்வளத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.