Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கொடிவேரி அணை” ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. திரண்டு வந்த சுற்றுலா பயணிகள்….!!

கொடிவேரி அணை பகுதியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக திரண்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடிவேரியில் பவானியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையிலிருந்து தண்ணீர் அருவி போன்று ஆர்ப்பரித்து கொட்டும். இந்நிலையில் தடுப்பணை பகுதியில் குளிப்பதற்காக ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிவார்கள். அதிலும் குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் தடுப்பணையில் குளிப்பதற்காக பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.

இந்நிலையில் கோபி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்ததால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் கொடிவேரி அணையிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் இந்த அணையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு பொதுப்பணித் துறை சார்பாக தடைவிதிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த அணை பகுதியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிக்கள் அங்கு குளிப்பதற்கு பொதுப்பணித்துறையினர் அனுமதி கொடுத்தனர். அதன்பின் அவர்கள் அந்த அணை பகுதியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

Categories

Tech |