Categories
மாநில செய்திகள்

பாத்திமா தற்கொலை : விசாரணையை தொடங்கியது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ..!!

மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது.

மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டு பிறகு நேற்று இருந்தே அதன் விசாரணையை மத்திய குற்றப்பிரிவு போலீசார்  தொடங்கினர்.  மத்திய குற்றப்பிரிவு விசாரணை குழுவினர் சென்னை ஐஐடி சென்று அங்குள்ள மூன்று பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தியதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.  நேற்று சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் ஐஐடி_க்கு வந்து விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து மத்திய குற்றவியல் பிரிவு போலீசார் விசாரணை நடந்த இன்று சென்னை ஐஐடி_க்கு வந்தனர். மாணவி பாத்திமா தற்கொலை சென்ற அறையை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

Image result for மாணவி பாத்திமா

மேலும் 3 பேராசிரியர்களும் தனித்தனியாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஐஐடி தரப்பிலிருந்து ஏற்கனவே காவல்துறையிடம் தெரிவித்து என்னவென்றால் மதிப்பெண் குறைவாக பெற்ற காரணத்தினால் மன உளைச்சலில் இருந்த அந்த மாணவி தற்கொலை செய்ததாக சொல்லப்படுகின்றது என்றதால் அந்த கோணத்தில் மதிப்பெண் பட்டியலை சேகரித்து வைத்து உள்ளார்கள்.அது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் மனைவியுடைய தோழிகள் , அதே அறையில் இருந்த மாணவிகளிடமும் விசாரணை நடத்துகின்றனர்.

Categories

Tech |