Categories
சினிமா தமிழ் சினிமா

‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடிகர் சரத்குமார் இணைந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. தற்போது இவர் படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் கோடியில் ஒருவன் படம் வெளியாகியிருந்தது. மேலும் விஜய் ஆண்டனி அக்னி சிறகுகள், மழை பிடிக்காத மனிதன், தமிழரசன், பிச்சைக்காரன் -2, கொலை, காக்கி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இதில் மழை பிடிக்காத மனிதன் படத்தை கோலி சோடா பட இயக்குனர் விஜய் மில்டன் இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சரத்குமார் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . இந்த படத்தில் அவர் விஜய் ஆண்டனிக்கு நண்பராக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சரத்குமார், விஜய் ஆண்டனி இருவரும் இணைந்து நடிப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |