தமிழகத்தில் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் வரும் 11-ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தின் வட மாவட்டங்களை ஒட்டியுள்ள கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதால் சென்னை,கடலூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, விழுப்புரம்,மயிலாடுதுறை, நாகை புதுச்சேரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி,திண்டுக்கல் ,கரூர், திருச்சி, நீலகிரி ,கோவை ,கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் அறிவித்துள்ளது.
மேலும் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்துள்ளது. மேலும் வரும் 11-ஆம் தேதி வரை வடக்கு கடலோர மாவட்டங்களில் கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் மேலும் தஞ்சாவூர் ,திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் நாளை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வடக்கு கடலோர மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளில் வரும் 10 மற்றும் 11-ம் தேதிகளில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளதால் குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.