வட அயர்லாந்தில் 4 பேர் கொண்ட கும்பல் கடத்திய பயணிகள் பேருந்தை தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்தின் Antrim மாவட்டம் Newtownabbey பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சுமார் 7.45 மணியளவில் இரட்டை அடுக்கு பயணிகள் பேருந்து ஒன்று தீயிட்டு கொளுத்தப்பட்டதாக அவசர உதவிக்குழுவினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி அவசர உதவிக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது “சம்பவத்தின்போது 4 பேர் கொண்ட கும்பல் பேருந்து பயணிகளை மிரட்டி வெளியேற்றினர். இதனையடுத்து அவர்கள் பேருந்தை தீயிட்டுக் கொளுத்தியதாக தெரிகிறது. அதன்பின் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் விரைவாக செயல்பட்டு பேருந்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
மேலும் அப்பகுதி பொதுமக்கள் சம்பவம் நடந்த பகுதியில் இருந்து விலகி இருக்குமாறு தெரிவிக்கப்பட்டது. இதில் முதற்கட்ட விசாரணையில் வடக்கு அயர்லாந்து நெறிமுறைக்கு எதிரான வெளிப்படையான எதிர்ப்பு இதுவென கூறப்படுகிறது. இதேபோன்று கடந்த திங்கட்கிழமையும் பயணிகள் பேருந்து ஒன்று கடத்தப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டது. ஆகவே அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் பல பேர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இது அர்த்தமற்றது என கூறியுள்ளனர். இத்தகைய குற்றவியல் நடத்தை மரணம் (அ) கடுமையான காயத்திற்கு வழிவகுக்கும் என DUP தலைவரான Jeffrey Donaldson தெரிவித்துள்ளார். எனவே வன்முறையால் அல்ல அரசியலால் நாட்டில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.