Categories
அரசியல்

டைம் வேஸ்ட் பண்ணாதீங்க… முதல்ல சீனாவை விரட்டியடிங்க மோடி… சுப்பிரமணியன் சாமி அதிரடி…!!!!

சீன ஆக்கிரமிப்பு குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை என்று சுப்பிரமணிய சுவாமி விமர்சனம் செய்துள்ளார்.

நம் இந்திய அரசு ஆப்கானிஸ்தான் பற்றி பேசி டைம் வேஸ்ட் செய்துகொண்டு இருக்கிறது. சீனா தான் நமது முதல் எதிரி. அதை பற்றி தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்திய எல்லைக்குள் தொடர்ந்து சீண்டல்களில் ஈடுபட்டுவரும் சீனா தற்போது உச்சகட்டமாக சாராய் ஆற்றுப்பகுதியில் இந்திய எல்லைக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை கொண்ட கிராமத்தை அமைத்துள்ளது. இதுதொடர்பாக கடந்த ஒருவாரமாக தகவல் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது இது உண்மைதான் என்று அமெரிக்காவின் பென்டகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சீனா தொடர்ந்து தனது படைகளை குவித்து வருவதாகவும், இந்தியாவுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை உறுதி படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சுப்ரமணிய சுவாமி டிவிட்  ஒன்றை செய்துள்ளார். அதில் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட விவகாரங்கள், கூட்டங்கள், ஆலோசனை நடத்தி மக்கள் வரி பணத்தை வீணடித்து கொண்டுள்ளது. மத்திய அரசு உண்மையான பிரச்சனையே இந்திய எல்லைக்குள் சீன ஊடுருவல்செய்வது தான். இதுதொடர்பாக 18 முறை இருதரப்பு கூட்டங்கள் நடத்தியும் ஒன்றும் புரியாமல் தத்தளித்துக் கொண்டு உள்ளது மோடி அரசு. தற்போது சீன ஆக்கிரமிப்பை அகற்றுவதே மோடி அரசின் பிரதான வேலையாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |