தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று பெய்த மழையால் சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதனால் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் ரயில்வே தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்க பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்தை சற்று தாமதமாக இயங்கி வருகின்றது.
குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் புகுந்து உள்ளதால் மக்கள் அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறாக மழை நேரங்களில் பல்வேறு பள்ளமான இடங்களில் மழைநீர் தேங்கும்.அதனால் உற்பத்தியாகும் கொசுக்களால் டெங்கு மற்றும் மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவ அதிக வாய்ப்புள்ளது. அதனால் அவற்றை சரிசெய்யும் விதமாக முன்னேற்பாடு வசதிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
மழைக்காலத்தையொட்டி மருத்துவ அவசர உதவி தேவைப்படுவோருக்கு உதவிடும் வகையில் உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி 044 – 2951 0400, 044 – 2951 0496, 044 – 2961 0500 ஆகிய எண்களில் ஏதேனும் ஒன்றை தொடர்பு கொண்டு மருத்துவ அவசர உதவி பெறலாம் அல்லது 8754448477 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம். அவ்வாறு உதவி கோருபவர்களுக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனைகளில் இருந்து மருத்துவ சேவை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.