நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா ஹூட் என்ற குரல்வழி செயலியை உருவாக்கினார். இதனை நடிகர் ரஜினிகாந்த் கடந்த 25ஆம் தேதி வெளியிட்டார். இந்நிலையில் இந்த ஹூட் செயலியில் பலரும் இணைந்து தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ரஜினி நலமுடன் இருப்பதாக ஹூட் செயலியில் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் . இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஹூட் செயலியில் இணைந்துள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள சமூக வலைத்தளங்கள முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ பக்கம் தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மக்களின் குரலுக்கு இந்த அரசு எப்போதும் செவிசாய்க்கும் எனவும் தெரிவித்திருந்தார்.