சுவிட்சர்லாந்திலுள்ள பண்ணை ஒன்றில் பணி புரியும் விவசாயி கால்நடைகளுக்குத் தேவையான உணவுகளை அரைக்க பயன்படுத்தப்படும் கிரைண்டரில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஸ்விட்சர்லாந்தில் சூரஜ் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலுள்ள கால்நடைகளுக்கான பண்ணை ஒன்றில் 59 வயதாகும் விவசாயி ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் கால்நடைகளுக்கு தேவைப்படும் உணவுகளை அரைக்கும் கிரைண்டரில் விழுந்ததால் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பான தீவிர விசாரணையில் சூரஜ் காவல்துறை அதிகாரிகள் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.