திருமண வீட்டின் முன்பு தகராறு செய்த நபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேலகுறும்பனை பகுதியில் புருனோ என்பவர் வசித்து வருகிறார். இவரது உறவினர் வீட்டில் கடந்த 27ஆம் தேதி திருமணம் ஒன்று நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு தன்னை அழைக்க வில்லை என்பதால் ஆத்திரமடைந்த புருனோ உறவினர் வீட்டின் வாசலில் நின்று தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தோணி என்பவர் அவரை தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த புருனோவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆச்சாரிபள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி புருனோ பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனால் புருனோவின் சகோதரி கருங்கல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கொலை வழக்காக மாற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.