Categories
உலக செய்திகள்

“காற்றின் மூலம் தயாரிக்கப்படும் விமான எரிபொருள்!”.. சாதனை படைத்த சுவிட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள்..!!

சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் காற்றின் மூலம் விமான எரிபொருளை தயாரிக்கக்கூடிய ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கியிருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

சூரிய ஒளி மற்றும் காற்று ஆகியவற்றை மட்டும் உபயோகித்து இந்த எரிபொருள் உருவாக்கப்படுகிறது. எனவே இது குறைந்த அளவிலான காற்று மாசை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. ETH Zurich என்ற சுவிஸ் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் ஒரு அமைப்பினர் கடந்த இரண்டு வருடங்களாக அசாதாரணமான ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்தனர்.

ஒரு இயந்திரத்தின் மூலம் காற்றிலிருந்து, கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீரை சேமித்து வைக்கிறார்கள். அதாவது CO2 மூலக்கூறுகளையும் H2O மூலக்கூறுகளையும், CO மற்றும் H2 மூலக்கூறுகளாக மாற்றி, குறிப்பிட்ட விகிதத்தில் CO மற்றும் H2 கலந்த கலவை syngasஎனப்படுகிறது. அதனை திரவ ஹைட்ரோகார்பன்களாக மாற்றி, கடைசியாக விமான எரிபொருளை தயாரிக்கிறார்கள்.

தற்போது, இந்த ஆட்சியாளர்கள் குறைவான எரிபொருளை உருவாக்கியிருக்கிறார்கள். கருவிகளில் சிலவற்றைப் மேம்படுத்திய பின் தொழில்துறை நண்பர்களின் உதவியோடு அதிக சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் வர்த்தகரீதியாக இந்த எரிபொருளை தயாரிக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

Categories

Tech |